» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நாங்குநேரி பெரியகுளம் கரைகளை சீர் செய்யும் பணி : ரூபி ஆர் மனோகரன் எம்எல்ஏ ஆய்வு !

செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 3:36:28 PM (IST)



நாங்குநேரி பெரியகுளம் கரைகளை சீர் செய்யும் பணிகளை ரூபி ஆர் மனோகரன் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

நாங்குநேரி பெரியகுளம் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் குளத்தின் கரைகள் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. தற்போது குளத்தின் கரைகளில் உள்ள கற்கள் வெளியே தெரிந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால் அடுத்த மழை வந்தால் குளம் உடைந்து நீர் முழுவதும் வெளியேறி பொதுமக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும். 

அதனை அறிந்ததும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர் மனோகரன் எம்எல்ஏ இன்று நேரில் சென்று குளத்தை பார்வையிட்டு பலவீனமாக உள்ள கரைப் பகுதிகளை உடனே பலப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று நீர்வளத்துறை அதிகாரிகள் தற்போது கரைகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்நிகழ்வில் நீர்வளத்துறை உதவி பொறியாளர் விக்னேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்வி.கிருஷ்ணன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகிய நம்பி, மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் செல்லப்பாண்டி, மறுகால்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் சாந்தாகுமாரி, மறுகால்குறிச்சி பஞ்சாயத்து துணை தலைவர் புஷ்பபாண்டி,  நாங்குநேரி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்எஸ் சுடலைக்கண்,நாங்குநேரி மேற்கு ஒன்றிய மதிமுக செயலாளர் வழக்கறிஞர் பேச்சிமுத்து, பெரியகுளம் விவசாய சங்க தலைவர் செந்தூர்பாண்டி , மாவட்ட பொதுச் செயலாளர் ஓபேத், பாளை மேற்கு வட்டார தலைவர் கணேசன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உடையார், விஎஸ் உடையார் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory