» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு வாழ்த்து
செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 4:00:51 PM (IST)
தென்காசி மாவட்டத்தில் புதிதாக பதவியேற்றுக் கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களை உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கே.திருமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக எல்.ரெஜினா பதவியேற்றுக் கொண்டார். மேலும் மாவட்டக் கல்வி அலுவலர்களாக கே.அமலா தங்கத்தாய், செ.மாரிமுத்து (தனியார் பள்ளிகள்) ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களை தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும், தென்காசி மாவட்ட மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் தாளாளர்கள் சங்க சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை நேரில் சந்தித்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.