» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நிதி நிறுவன உரிமையாளர் தற்கொலை!

செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 5:12:56 PM (IST)

கடையம் அருகே ஆன்லைன் ரம்மியில் ரூ. 6 லட்சம் வரை பணத்தை இழந்த நிதி நிறுவன உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள சேர்வைக்காரன்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் சக்திவேல் (31). டிப்ளமோ பட்டதாரி. இவருக்கு அருணா என்ற மனைவியும், 3 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். சக்திவேல் கடையத்தில் வாகனங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 21-ந் தேதி சக்திவேல் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தென்காசியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். சமீப காலமாக ஆன்லைன் ரம்மியில் சக்திவேல் மிகவும் ஈடுபாடு கொண்டு இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் அந்த விளையாட்டுக்கு அடிமையாகி ரூ. 6 லட்சம் வரை பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory