» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கல்வி, வேலைவாய்ப்பில் தமிழ்நாடு சாதனை படைத்து வருகிறது: நான் முதல்வன் கருத்தரங்கில் தகவல்!

செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 5:26:05 PM (IST)



கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தமிழ்நாடு மாபெரும் சாதனைகளைப் படைத்து வருகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், அபிசேகப்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வ.உ.சி அரங்கத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய கல்லூரி நிறுவன தலைவர்களுடன் மாநில அளவிலான கருத்தரங்கம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், தலைமையில், இன்று (27.08.2024) நடைபெற்றது.

இக்கருத்தரங்கில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, தெரிவித்ததாவது; நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்வியில் தமிழ்நாடு அரசு புகுத்தியுள்ள புதுமையான திட்டங்கள் நாட்டில் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் தேசிய அளவில் முன்னுதாரணமாக திகழ்கின்றன.

கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தமிழ்நாடு மாபெரும் சாதனைகளைப் படைத்து வருகிறது. நான் முதல்வன் திட்டம் எந்தத்திசையில் சென்று கொண்டிருக்கிறது இனி எந்தத் திசையில் சென்றால் இன்னும் அதிகமான வெற்றிகளை குவிக்க முடியும் என்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதே இந்தக் கருத்தரங்கம் நடைபெறுவதன் நோக்கம்.

கல்லூரிகளை நாடி வருவதற்கு இரண்டு அம்சங்கள் முக்கியமானவை. திறன்மிக்க மாணவர்கள் இருக்க வேண்டும். Skill Lab, Skill Based syllabus coaching, College Ranking போன்ற தரவரிசையில் கல்லூரிகள் முன்னிலை வகிப்பதன் மூலம் மாணவர்கள் கல்லூரிகளை நாடி வருகின்றனர். நான்முதல்வன் திட்டத்தில் வழங்கப்படும் திறன் பயிற்சி ஒரு கூட்டு முயற்சி ஆகும். மாணவர்கள், கல்லூரிகள், பேராசிரியர்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். 

நான் முதல்வன் திட்டம் வேலைவாய்ப்பு பெறுவதற்கான சவால்களுக்கு தீர்வாக அமைந்துள்ளது. கல்லூரி நிர்வாகங்கள் இத்திட்டத்தின் நோக்கத்தினை புரிந்து கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இக்கருத்தரங்கத்தில் பகிரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இன்னும் இலட்சக்கணக்கான இளைஞர்கள் திறன் பெறுவதற்கு இத்திட்டத்தை மேலும் செழுமைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். எனவே, நான் முதல்வன் எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளிலும் கல்லூரிகள் பங்குபெற்று இத்திட்டத்தினை வெற்றிபெறச் செய்யவேண்டும் என தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் ஜே.இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்கள்.

இக்கருத்தரங்கில், மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், தெரிவித்ததாவது: இந்தியாவில் தொழிற்சாலைகளில் அதிகம் பணிபுரிபவர்கள் கொண்ட முதன்மை மாநிலம். இந்தியாவில் இரண்டாம் பொருளாதாரம். Automobile capital of India, Medical duration of India, SAR’s capital of India இப்படி ஒவ்வொன்றாக அடுக்கி கொண்டு போகக்கூடிய அளவிற்கு தொழிற்துறை மற்றும் நவீன தொழில்நுட்ப துறைகளில் முன்னேறி கொண்டிருக்கின்ற மாநிலம் நமது தமிழ்நாடு. 
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் அதனைசார்ந்த பகுதிகள் முதற்கட்ட வளர்ச்சியாகவும், கோவை, திருச்சி மண்டலம், ஓசூர் கிருஷ்ணகிரி மண்டலம் ஆகிய மாவட்டங்களின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் அடுத்த விரைவான வளர்ச்சி சேவைகளை செயல்படுத்தக்கூடிய Growth Engine ஆக செயல்படக்கூடிய வாய்ப்பு இருக்கக்கூடிய பகுதியாக திருநெல்வேலி மாவட்டம் திகழ்கிறது. 
தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகள் பெரிய அளவிலான முதலீடுகள் மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடியில் பெரிய கார் நிறுவனங்களும், திருநெல்வேலியில் முதலீடுகளில் உலகளவிலான சோலார் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் முதல் முறையில் சோலார் பேனல் தயாரிக்கப்பட உள்ளது. சந்திரனுக்கு விண்கலம் போனாலும் அந்த விண்கலத்திற்கான எரிபொருளும் மற்றும் என்ஜின் மகேந்திரகிரியிலிருந்து செல்கிறது. தமிழ்நாட்டின் அடுத்த வளர்ச்சியில் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மண்டலம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. 
நவீன துறைகளுக்கு ஏற்றவாறு மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களை தயார்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசால் நான் முதல்வன் திட்டம் கொண்டுவரப்பட்டது. உயர்ந்த நாடுகளின் வளர்ச்சிக்கு இணையாக இன்றும் பத்து வருடங்களில் தமிழ்நாடும் மிகப்பெரிய அறிவுசார் பொருளாதாரமாக மாற வேண்டுமென்றால் நவீன தொழில்நுட்பங்களை கற்றுத் தர வேண்டும். தொழில்நுட்ப தொழிற்சார்ந்த அறிவு அதற்கு தயார் செய்கின்ற மாணவர்களாக இருக்க வேண்டும். அந்த மாணவர்கள் வாயிலாக அடுத்தகட்ட வளர்ச்சிக்கு செல்ல முடியும். இதற்கான பயணத்தில் நல்ல முன்னெடுப்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இக்கருத்தரங்கம் நடைபெறுகிறது.

மேலும், 120க்கும் மேற்பட்ட Startup TN நிறுவனங்கள் பதியப்பட்டு, விளங்கி கொண்டிருக்கிறது. நவீன நெல்லையினை உருவாக்குவதற்காக வந்திருக்கின்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், தெரிவித்தார். 

இந்த சந்திப்பில், திநெல்வேலி மண்டலங்களில் இருந்து 320 பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் பங்கேற்றன.மாணவர்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த 8 கல்லூரி நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், இத்திட்டத்திற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்றிய கல்லூரிகளின் முகவர்கள் 21 பேராசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. 

இக்கருத்தரங்கில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் துணை வேந்தர் சந்திரசேகர், பதிவாளர் சாக்ரெட்டீஸ், உதவி ஆட்சியர் பயிற்சி செல்வி அம்பிகா ஜெயின், அண்ணா பல்கலைக் கழக அரசு பொறியியல் கல்லூரி முதல்வர் செண்ப விநாயகமூர்த்தி, பல்கலைக்கழக நான் முதல்வன் செயல்பாட்டு பிரிவு தலைவர் சுருளியாண்டி , துணைத்தலைவர் (MEAC- நான் முதல்வன்) முகமது செரிப் , உட்பட பலர் கலந்து கொண்டார்கள் 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory