» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பிரதான சாலையில் கழிவு நீர் தொட்டியின் மூடி உடைந்து விபத்து அபாயம்: சிபிஎம் கோரிக்கை!

செவ்வாய் 10, செப்டம்பர் 2024 12:21:11 PM (IST)

தூத்துக்குடியில் பிரதான சாலைகளில் கழிவு நீர் தொட்டி மூடிகளை தரமாக அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் எம்.எஸ்.முத்து மாநகராட்சிக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டதின் கீழ் போடப்பட்ட சாலையான அம்பேத்கர் சிலையிலிருந்து தலைமை தபால் அலுவலகம் வரை கான்கிரிட் ரோடு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இச்சாலையை திருச்செந்தூர் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளுக்கும், நகரின் தென் பகுதிகளுக்கும் செல்லும் அத்தியாவசியான சாலையாக உள்ளது. 

பேரூந்து உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் சாலையில் போடப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டியின் மூடி அடிக்கடி அதாவது தினமும் உடைந்து விபத்தை சந்திக்கும் நிலை உள்ளது. உறுதித் தன்மை மிக மோசமாக உள்ளதாக தெரிய வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு திருச்செந்தூர் ரோட்டின் இந்த பிரதான சாலையில் பொருத்தப்பட்டுள்ள கழிவு நீர் சேகரிப்பு தொட்டியின் மூடி உறுதியானதாகவும் (Heavy load resistance) தரமானதாகவும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து

KumarSep 10, 2024 - 04:16:22 PM | Posted IP 162.1*****

இந்த சாலை ஒரு தரமற்ற சாலை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory