» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது!
ஞாயிறு 22, செப்டம்பர் 2024 6:45:55 PM (IST)
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சரித்திர பதிவேடு குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
தென்காசி மாவட்டம் கடையம் கல்யாணிபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி மகன் பாலமுருகன் (36). இவர் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஆதாய கொலை, திருட்டு மற்றும் 72க்கும் மேற்பட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்.
சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர். ஶ்ரீனிவாசன் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சித்தலைவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து பாலமுருகனை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.