» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காவல் நிலையத்தில் திருநங்கைகள் திடீர் ரகளை: போலீசார் தடியடி‍; 40பேர் மீது வழக்கு!

வியாழன் 26, செப்டம்பர் 2024 8:37:02 AM (IST)

பணகுடி காவல் நிலையத்தில் புகுந்து திடீர் ரகளையில் ஈடுபட்டதாக திருநங்கைகள் 40பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

நெல்லை மாவட்டம், பணகுடி போலீசார் நேற்று முன்தினம் இரவு காவல்கிணறு சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது காவல்கிணறு- பணகுடி இடையே நான்கு வழிச்சாலையில் இருட்டு பகுதியில் திருநங்கைகள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை வழிமறித்து தொந்தரவு தருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு நின்ற திருநங்கைகளை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும், அங்கிருந்து செல்லாமல் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் போலீசாருக்கும், திருநங்கைகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த திருநங்கைகள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு பணகுடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் அஜிகுமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்ற திருநங்கைகளில் சிலர் திடீரென கற்களை வீசி போலீசாரை தாக்கி, காவல் நிலையத்தில் உள்ள பூந்தொட்டிகளையும் அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனை போலீசார் தடுத்தபோது திருநங்கையில் ஒருவர் தனது ஆடைகளை களைந்து அரை நிர்வாணத்தில் ஆபாசமாக பேசி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், தாங்கள் வைத்திருந்த லத்தியால் தடியடி நடத்தி திருநங்கைகளை விரட்டினர். இதனால் காவல் நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக அத்துமீறி நுழைதல், அரசு பணி செய்யவிடாமல் தடுத்தல், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற 3 பிரிவுகளின் கீழ் 40-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இதுகுறித்து மேல்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மேல்விசாரணைக்கு நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory