» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவருக்கு 5 ஆண்டு சிறை!
வியாழன் 26, செப்டம்பர் 2024 8:38:29 AM (IST)
8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நெல்லை மேலப்பாளையம் பீடி காலனி ரோஜா நகரை சேர்ந்தவர் வேலு. இவருடைய மகன் பாலசுப்பிரமணியன் (49). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த 2022-ம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நெல்லை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதி (பொறுப்பு) சுரேஷ்குமார் விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட பாலசுப்பிரமணியனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் அரசு வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு சார்பில் வழக்கறிஞர் உஷா ஆஜரானார்.