» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தென்காசி அருகே பொதுமக்களை அச்சுறுத்திய மலைப்பாம்பு சிக்கியது
வியாழன் 26, செப்டம்பர் 2024 5:56:06 PM (IST)
தென்காசி அருகே பொதுமக்களை அச்சுறுத்திய மலைப்பாம்பை தீயணைப்பு படையினர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
தென்காசி அருகே உள்ள வேட்டைக்காரன் குளம் கோகுலம் நகர் பகுதியில் இன்று மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கு மலைப்பாம்பை சல்லடை போட்டு தேடினர்.
அப்போது சுவர் இடுக்கு பகுதியில் மலைப்பாம்பு பதுங்கி இருந்ததை கண்டுபிடித்தனர். பாம்பு பிடி இடுக்கி மூலமாக மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அது சாக்கு பையில் போடப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் மலைப்பாம்பை பத்திரமாக குற்றாலம் மலைப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.