» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இடி தாக்கி டவர் சரிந்தது - மின்சாரம் துண்டிப்பு!
சனி 26, அக்டோபர் 2024 5:48:04 PM (IST)
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இடி தாக்கி டவர் சரிந்து விழுந்ததால் மதுரை செல்லும் மின்பாதையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் இன்று பிற்பகல் 3 மணி முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த நிலையில், இன்று மாலை பெய்த கனமழையால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் இடிதாக்கி மதுரை பீடர் (டவர்) சரிந்தது. இதனால் மதுரை செல்லும் மின்பாதையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
DurgadeviOct 26, 2024 - 07:46:36 PM | Posted IP 172.7*****