» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் 84-ஆவது மாதக் கூட்டம்

ஞாயிறு 27, அக்டோபர் 2024 8:30:44 AM (IST)



கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் 84-ஆவது மாதக் கூட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் 84-ஆவது மாதக் கூட்டம், என். கே. மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ராஜபாளையம், நகைச்சுவை மன்றத்தின் தலைவர் சந்திரன்ராஜா தலைமை தாங்கினார். தூத்துக்குடி, காரப் பேட்டை நாடார் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் முத்துகணேஷ் முன்னிலை வகித்தார்.

மன்றக் காப்பாளர் துரைராஜ் அனைவரையும் வரவேற்றார். தான் வாசித்த புத்தகத்தின் சிறப்பை பதிவு செய்த, ஆசிரியை கவிதா அவர்களுக்கு, வாசிப்பதை நேசிப்பவர் விருது வழங்கி பாரட்டப் பட்டது. தொடந்து மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, தமிழ்ச்சுடர் தாமல் கோ. சரவணன் கலந்து கொண்டு "வாழ்வைக் கொண்டாடுங்கள்” என்னும் தலைப்பில் மகிழ்வுரை வழங்கினார்கள்.

மன்றக் காப்பாளர் செல்வின் நன்றி கூறினார். கூட்டத்தில் மன்றக் காப்பாளர்கள் மோகன்ராஜ், சேர்மத்துரை, ராஜபாளையம் நகைச்சுவை மன்ற செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியைகள் ஜான்சிராணி, கனகலதா, தமிழாசிரியர் ராஜசேகர், தொழிலதிபர் நாகேஸ்வரன், ராஜபாளையம் நகைச்சுவை மன்ற நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

Agri D.Subramanian Rajapalayam Humour club Secratary..Oct 28, 2024 - 07:12:43 AM | Posted IP 162.1*****

Congratulations...Best wishes for Kovilpatti Manamazghil mandram organisers sincere efforts to conduct 84 th function very successfully.. Agri DS RJPM

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory