» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மாணவிக்கு பாலியல் தொல்லை : தனியார் பள்ளி நிர்வாகி கைது!

புதன் 6, நவம்பர் 2024 8:41:25 AM (IST)

சங்கரன்கோவில் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பள்ளி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரம் கிராமத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் பயின்று வருகிறார்கள்.

இந்த பள்ளியின் நிர்வாகியும், ஆசிரியருமான கோபால் மகன் கோபிநாத் (29). இவர் கடந்த ஆண்டு அதே பள்ளியில் படித்து வந்த பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அந்த மாணவியை அவர் மறைமுகமாக திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அந்த மாணவி பள்ளிப்படிப்பை முடித்த நிலையில் கோபிநாத் மற்றும் அந்த மாணவி நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது பரவியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் உறவினர்கள், இதுகுறித்து சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி விசாரணை நடத்தியதில், கோபிநாத் அந்த மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை போலீசார் கைது செய்தனர். கோபிநாத்திற்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இல்லாத நிலையில் அவரது மனைவி பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory