» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

புதன் 25, டிசம்பர் 2024 5:20:25 PM (IST)

நெல்லையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

கிறிஸ்துவர்களின் முக்கியப் பண்டிகையான கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள மிகவும் பழமையான தேவாலயமான தூய சவேரியார் பேராலயத்தில் சனிக்கிழமை அதிகாலையில் பாளையங்கோட்டை மறைமாவட்ட பேராயர்  தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. திருப்பலியின் முடிவில் கிறிஸ்துவர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். 

தென்னிந்திய திருச்சபை சார்பில் முருகன்குறிச்சியில் உள்ள தூய திரித்துவ பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. கிறிஸ்துமஸ் தேவ செய்திக்கு பின்பு, திருவிருந்து உபசரணை நடைபெற்றது. பிரார்த்தனைகளின் முடிவில் அனைவருக்கும் கேக்குகள் வழங்கப்பட்டன.

இதேபோல பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம், மேலப்பாளையத்தில் உள்ள தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரத்தில் உள்ள தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகரில் உள்ள குழந்தையேசு தேவாலயம், உடையார்பட்டியில் உள்ள இயேசுவின் திரு இருதய ஆலயம், திருநெல்வேலி நகரத்தில் உள்ள அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள அந்தோனியார் தேவாலயம் ஆகியவற்றிலும் கிறிஸ்துமஸ் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

மேலப்பாளையம் சேவியர்காலனியில் உள்ள தூய பேதுரு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் மரவிழா மற்றும் ஞாயிறு பள்ளி மாணவர்-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. சபை ஊழியர் பி.கிறிஸ்டோபர் வரவேற்றார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மரவிழா பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory