» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு!

திங்கள் 23, டிசம்பர் 2024 5:55:48 PM (IST)



திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் சந்தை மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இராதாபுரம் வட்டம் வள்ளியூர் பேருந்து நிலையம் அருகில் ரூ. 5.77 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும்; 222 கடைகளுடன் புதிய சந்தை மேம்படுத்தும் பணிகளையும், கூட்டப்புளி கிராமத்தில் ரூ.48 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிகளையும், பெருமணல் கடற்கரை பகுதியில் தூண்டில் வளைவு அமைப்பதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு தூண்டில் வளைவு அமைக்கப்படவுள்ள பகுதியினையும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு , நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

மேலும், இடிந்தகரை மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவு விரிவுப்படுத்துவதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரிவுப்படுத்தப்பட்டுள்ள பகுதியை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு , நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

தொடர்ந்து, இடிந்தகரை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருக்கும்போது, பஹ்ரைன் நாட்டு கடலோர காவல்படையினரால் 11.09.2024 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட 28 மீனவர்களுக்கு பஹ்ரைன் நாட்டு அரசு 6 மாத காலம் சிறைத்தண்டனை விதித்தது.

இச்செய்தியை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களுக்கு மீனவர்களை விடுதலை செய்யுமாறு கடிதம் வாயிலாக தெரிவித்தார்கள். அரசின் பல்வேறு நடவடிக்கையால் மீனவர்களின் சிறைத்தண்டனைக் காலம் 6 மாதத்திலிருந்து 3 மாதங்களாக குறைக்கப்பட்டது. அதன்படி, சிறையில் அடைக்கப்பட்ட 28 மீனவர்களும் மூன்று மாத கால சிறைத்தண்டனை முடிவுற்று பஹ்ரைன் நாட்டு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு, 18.12.2024 அன்று விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்தடைந்த மீனவர்களை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு , நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ் வரவேற்று சொந்த ஊருக்கு வழியனுப்பி வைத்தார்கள். தமிழ்நாடு அரசின் இத்தகைய பெரும் முயற்சியால் 28 மீனவர்களும் அவர்களது சொந்த ஊரான இடிந்தகரை வந்தடைந்துள்ளனர்.

இன்று இடிந்தகரையில், பஹ்ரைன் நாட்டிலிருந்து தாயகம் திரும்பிய 28 மீனவர்களை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் நேரில் சந்தித்து நிவாரண உதவிகளை வழங்கினார்கள். ஆய்வில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன், நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப் துணை மேயர் கே.ஆர்.ராஜூ , முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் உட்பட பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory