» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 51 பவுன் நகை கொள்ளை: நெல்லையில் துணிகரம்

வியாழன் 7, நவம்பர் 2024 9:03:01 AM (IST)

நெல்லையில் பட்டப்பகலில் கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 51 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

நெல்லை காந்திநகர் பகுதியில் உள்ள ஐ.ஓ.பி. நகர் முதல் தெருவை சேர்ந்தவர் அந்தோணி தங்கராஜ் (47). இவர் பழையபேட்டை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி செங்கோல் மேரி. இவர் பாளையங்கோட்டை மல்டி ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று காலையில் வழக்கம் போல் குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்டனர். கணவன்- மனைவியும் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வேலைக்கு புறப்பட்டனர். காலை 11 மணியளவில் செங்கோல்மேரியின் வீட்டிற்கு அவரது தந்தை வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அவர் தனது மகள் மற்றும் மருமகனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும், பேட்டை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்தோணி தங்கராஜ் மற்றும் போலீசார் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 51 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

ேமலும் போலீஸ் துணை கமிஷனர் கீதா, உதவி கமிஷனர் செந்தில் குமார், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 மர்மநபர்கள் வந்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. 

வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் முன்பக்க கதவை முதலில் உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களால் முடியாததால் பின்கதவை உடைத்து பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டில் ஆட்கள் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. கொள்ளை போன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த துணிகர கொள்ளை குறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். நெல்லையில் பட்டப்பகலில் கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 51 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory