» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வைரக்கல் இருப்பதாக பாறை உடைப்பு: ஜேசிபி ஆபரேட்டர் கைது

வெள்ளி 8, நவம்பர் 2024 12:32:47 PM (IST)

ஏர்வாடி அருகே வைரக்கல் இருப்பதாகக் கூறி குளத்து பாறையை உடைத்த ஜேசிபி ஆபரேட்டரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் கருத்தானேரி குளத்தில் ஆங்காங்கே சின்ன சின்ன பாறைகள் உள்ளன. அவற்றில் வைரக்கல் இருப்பதாக கூறி மர்ம நபர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் பாறையை உடைத்துக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக அந்த பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் முருகம்மாள் ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

அதன்பேரில், போலீசார் குளத்திற்கு சென்றனர். அவர்களைப் பார்த்ததும் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பொக்லைன் ஆபரேட்டர் மட்டும் போலீசாரிடம் சிக்கினார். விசாரணையில் அவர் மதுரை அருகேயுள்ள உசிலம்பட்டியைச் சேர்ந்த ராஜாராம் மகன் கணேசன்(23) எனத் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory