» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் தொழில் அதிபர் வீட்டில் 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

சனி 9, நவம்பர் 2024 8:55:15 AM (IST)

நெல்லையில் தொழில் அதிபர் வீட்டில் நேற்று 3-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

நெல்லை வண்ணார்பேட்டை இந்திரா காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். மாட்டு எலும்புகளை அரைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். கடந்த 6-ந்தேதி மதுரை வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் இவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். 

நேற்று முன்தினம் 2-வது நாளாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நேற்று 3-வது நாளாகவும் இந்த சோதனை நடைபெற்றது. காலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் வெங்கடேஷ் வீட்டுக்கு வந்தனர். அங்கு கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள், தொழில் வருமான விவரம், சொத்து மதிப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

மேலும் அவரது வங்கிக் கணக்கு, பணம் இருப்பு, பணப்பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களையும் பார்வையிட்டனர். இதில் வரி ஏய்ப்பு ஏதேனும் நடந்துள்ளதா? எனவும் விசாரணை நடத்தினர். 3-வது நாளாக நடந்த இந்த சோதனையால் பரபரப்பு நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory