» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரிசி ஆலை அதிபரை காருடன் கடத்திய 4 பேர் கும்பல் கைது: பரபரப்பு தகவல்கள்

ஞாயிறு 10, நவம்பர் 2024 9:14:10 AM (IST)

கடையம் அருகே பண விவகாரத்தில் அரிசி ஆலை அதிபரை காருடன் கடத்திய 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். 

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள குருசாமியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவர் கடையம் அருகே உள்ள கோவிலூற்று பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி தனலட்சுமிநகரைச் சேர்ந்த சங்கர் மகன் சூரியகுமார் (31) என்பவரிடம் நெல் கொள்முதல் செய்தார். 

ஆனால், அதற்கான பணம் குறிப்பிட்ட தொகை மட்டும் கொடுத்துவிட்டு மீதி பாக்கி வைத்ததாகவும், காலதாமதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதாவது ரூ.98 லட்சத்தில் ரூ.77 லட்சத்தை கொடுத்துவிட்டதாகவும், மீதம் உள்ள ரூ.21 லட்சத்தை கொடுக்காமல் இருந்ததாகவும் தெரிகிறது.

நேற்று முன்தினம் உதயகுமாரின் அரிசி ஆலைக்கு சூரியகுமார் உள்பட 4 பேர் வந்தனர். அவர்கள் உதயகுமாரிடம் பணம் குறித்து கேட்டனர். அவர் முன்னுக்கு பின் முரணமாக பதில் அளித்தார். இதில் ஆத்திரம் அடைந்த சூரியகுமார் உள்பட 4 பேரும் உதயகுமாரை அங்கிருந்த அவரது காரில் ஏற்றிக் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து அறிந்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உதயகுமாரின் தந்தை அன்பழகன் கடையம் போலீசில் புகார் செய்தார். மேலும் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில் தனிப்படையும் அமைக்கப்பட்டது.

அவர்கள் உதயகுமாரின் ெசல்போன் சிக்னல் மூலம் காரை பிடிக்க போலீஸ் வாகனத்தில் விரைந்து சென்றனர். பெரம்பலூர் பகுதியில் சென்றபோது காரை மடக்கிப்பிடித்து உதயகுமாரை அதிரடியாக மீட்டனர்.

மேலும் அவரை கடத்தியதாக சூரியகுமார், பண்ருட்டி வில்வாநகர் பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சுரேஷ் (39), கடலூர் புதுப்பாளையம் படைவீட்டு அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சிவசண்முகம் மகன் ஹரிகிருஷ்ணன் (30), விராலிமலை மேலப்பட்டகுடி அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த நதநீதகுமார் மகன் பிரதீபன் (30) ஆகிய 4 பேரை அதிரடியாக கைது செய்து தென்காசிக்கு அழைத்து வந்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து, கடத்தப்பட்ட நபரை மீட்ட போலீசாரை தென்காசி மாவட்ட சூப்பிரண்டு சீனிவாசன் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory