» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்: ஆட்சியர் துவக்கி வைத்தார்!

திங்கள் 11, நவம்பர் 2024 5:13:26 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியினை பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு, மாணவ மாணவிகள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்று பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி ஊக்குவித்து வருகிறது. உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3 ம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது. மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள் இன்று நடத்தப்பட்டது. 

இன்று நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பிடிப்பவர்கள் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப்போட்டியில் கலந்து கொள்வார்கள். இன்று நடைபெற்ற மாவட்ட அளவிளாலன விளையாட்டுப் போட்டியில் மாவட்டத்தில் உள்ள சிறப்பு பள்ளிகள் மற்றும் சிறப்பு இல்லங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டியினை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தொடங்கி வைத்து, மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டு விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினார்கள்.

இன்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், நின்று நீளம் தாண்டுதல், வட்டத்தட்டு எறிதல்,குண்டு எறிதல், 200 மீ ஓட்டம் போட்டிகளும், காது கேளாத மாணவர்களுக்கு 100,200 மீட்டர் ஓட்டம்,குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் 4ஓ100 மீட்டர் தொடர் ஓட்டம் போட்டிகளும், மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டம், நின்று நீளம் தாண்டுதல், ஓடி நீளம் தாண்டுதல், போன்ற போட்டிகளும், கை,கால் பாதிக்கப்பட்டோருக்கு 50 மீட்டர், 75 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம் போட்டிகளும், ஸ்பாஸ்டிக் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு சேகரித்தல், கிரிக்கெட் பந்து எறிதல், தடை தாண்டி ஓடுதல் போட்டிகளும் நடைபெற்றது. இப்போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களை பிடிப்பவர்கள் மாநில அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ்.சிவசங்கரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் செல்வ ரேவதி, உட்பட விளையாட்டு வீரர்கள் மாணவ, மாணவியர்கள் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory