» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை அருகே ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை
வியாழன் 14, நவம்பர் 2024 8:22:18 AM (IST)
நெல்லை அருகே ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் காட்டுப்பகுதியில் மீட்கப்பட்டது.
நெல்லையை அடுத்த சீவலப்பேரி அருகே உள்ள அக்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (70). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவருக்கு கனகமுத்து (64) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். மகள்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள். தற்போது செல்வராஜ் தனது மனைவியுடன் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் மதியம் நெல்லை அருகே மேலப்பாட்டம் காட்டுப்பகுதியில் ஆண் பிணம் கிடப்பதாக பாளையங்கோட்டை தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, பிணமாக கிடந்தவர் செல்வராஜ் என்பது தெரியவந்தது. அவரின் உடல் அருகே விஷப்பாட்டில்களும் கிடந்தன. இதனால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். செல்வராஜ் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லை அருகே ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.