» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்திற்கு: அரசுத் தேர்வுகள் துறை முக்கிய அறிவிப்பு!

வியாழன் 14, நவம்பர் 2024 10:22:11 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் 90 நாட்களுக்குள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டத்தில் இடைநிலைப் பொதுத்தேர்வு (SSLC) எழுதிய தனித்தேர்வர்களின் கவனத்திற்கு, மார்ச் 2017 முதல் ஜூன்/ஜூலை 2020 வரையிலான அனைத்து பருவங்களுக்குரிய தனித்தேர்வர்களால் கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று நவ.14 முதல் 90 நாட்களுக்குள் தேர்வு எழுதிய நுழைவுச் சீட்டுடன் திருநெல்வேலி அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரில் அணுகி பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

தவறினால் மேற்படி தேர்விற்குரிய மதிப்பெண் சான்றிழ்களை விதிமுறைகளின்படி அழிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என  திருநெல்வேலி அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலக உதவி இயக்குநர் (பொறுப்பு) ந.சுதா  தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory