» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்

வியாழன் 14, நவம்பர் 2024 4:08:23 PM (IST)

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிசி, எம்பிசி, மற்றும் டிஎன்சி வகுப்பைச் சார்ந்த மாணவ மாணவிகள் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை (Fresh and Renewal Application) விண்ணப்பிக்கலாம்.

இது தாெடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கா.ப.கார்த்திகேயன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIIT, NIT மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ/மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக கற்ப்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணம் ஆகிய கட்டணங்களுக்காக மாணாக்கரால் செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00இலட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

மேற்படி கல்வி உதவித்தொகைக்கு, 2024-25 ஆம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் (Fresh and Renewal Application) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணாக்கர்கள், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் சென்னை 5/மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் நல இயக்ககம் சென்னை-5 / மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் 2024-2025 நிதியாண்டிற்கான புதியது (FRESH) மற்றும் புதுப்பித்தல் (RENEWAL) கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 

கல்வி நிறுவனங்கள், தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம் 2வது தளம், சேப்பாக்கம் சென்னை-5 தொலைபேசி எண் 044-29515942, மின்னஞ்சல் முகவரி [email protected] என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை 15-12-2024 க்குள் மற்றும் புதியது (Fresh) விண்ணப்பங்களை 15-01-2025 க்குள் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

Jayavarshini .MNov 17, 2024 - 07:32:13 PM | Posted IP 162.1*****

It is very usefull

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory