» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: கண்காணிப்பு அலுவலர் சந்தீப் நந்தூரி ஆய்வு!

வியாழன் 14, நவம்பர் 2024 4:18:13 PM (IST)



திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (14.11.2024) மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், ஆகியோர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்தும் அனைத்துத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டனர்.

இக்கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நீர்வளத்துறை மூலம் மாவட்டத்திலுள்ள வடிகால்கள் தொடர்ந்து தூர்வாரப்பட்டு வருகின்றன. விடுபட்டுள்ள இடங்களையும் விரைந்து தூர்வாரிட தொடர்புடைய துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சாலைப்பணிகள், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறும் பகுதிகளில் தகுந்த எச்சரிக்கை பலகைகள் வைத்திடவும், தடுப்புகள் அமைத்திடவும், தொடர்புடைய துறைகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.

டெங்கு, எலி காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளவும், தொற்று நோய் பாதிப்புகள் ஏற்பட்டால் அப்பகுதிகளில் உடனுக்குடன் மருத்துவ முகாம்களை நடத்திடவும் துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, வடகிழக்கு பருவமழை காலத்தில் அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும், வேளாண்மை-உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறைகளின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கலைஞரின் கனவு இல்லம், முதல்வரின் கிராம சாலைகள் திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். மேலும், மாவட்டத்தில் நடைபெற்று வரும் அனைத்து திட்டப் பணிகளையும் துறைசார்ந்த அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, பாளையங்கோட்டை அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் ரூ.72 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சிறப்பு சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டடத்தினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அர்பித் ஜெயின், துணை காவல் கண்காணிப்பாளர் அனிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அம்பிகா ஜெயின், உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory