» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அமரன் படம் ஓடும் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சு: நெல்லையில் பரபரப்பு!

சனி 16, நவம்பர் 2024 11:40:28 AM (IST)



நெல்லை மேலப்பாளையத்தில் 'அமரன்' படம் திரையிடப்பட்ட திரையரங்கில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' திரைப்படம் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள திரையரங்கில் திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று(சனிக்கிழமை) காலை திரையரங்கத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திரையரங்க வளாகத்திற்குள் 3 பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். இது குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசிடிவியில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளதன் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் திரையரங்கில் காலை காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமரன் திரைப்படத்தில் குறிப்பிட்ட மதத்தை தவறாக சித்தரித்ததாக சர்ச்சைகள் எழுந்தன. இதன் காரணமாக சில மாநகரப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் போலீஸ் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory