» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை!
சனி 25, ஜனவரி 2025 10:11:30 AM (IST)
நெல்லை ரயில் நிலையத்துக்கு மர்ம நபர்கள் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை கோபாலசமுத்திரம் பகுதியில் இருந்து சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து நெல்லை ரயில் நிலையத்தில் மோப்ப நாயுடன் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் இன்று(ஜன. 25) காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மிரட்டல் விடுத்தவர் யார் என்பது குறித்தும் விசாரணை தொடங்கியுள்ளது. நேற்று தூத்துக்குடி விமான நிலையம், கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும் பின்னர் சோதனையில் அது புரளி என்பதும் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை ஜாகிர் உசேன் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு
புதன் 26, மார்ச் 2025 4:06:47 PM (IST)

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சீரானது: சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
புதன் 26, மார்ச் 2025 10:58:11 AM (IST)

ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கொலை வழக்கு: தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை
செவ்வாய் 25, மார்ச் 2025 5:28:42 PM (IST)

நெல்லை சரக டிஐஜி உட்பட காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
செவ்வாய் 25, மார்ச் 2025 4:32:51 PM (IST)

திருநெல்வேலியில் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சி முகாம்: ஏப்.1ம் தேதி துவங்குகிறது!
செவ்வாய் 25, மார்ச் 2025 12:30:33 PM (IST)

கடந்த 3 மாதங்களில் நாட்டிலேயே அதிக மழையை பெற்றுள்ள தென் மாவட்டங்கள்!
திங்கள் 24, மார்ச் 2025 8:32:18 PM (IST)
