» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லை ரயிலில் காற்று வாங்கும் ஏசி பெட்டிகள் : ரயில்வே நிர்வாகம் அலட்சியம்
வியாழன் 5, டிசம்பர் 2024 3:29:05 PM (IST)
நெல்லை - சென்னை எழும்பூர் சிறப்பு ரயிலை இரட்டை அகல பாதையில் இயக்க வேண்டும் என்று தென் மாவட்ட பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
நெல்லையிலிருந்து இன்று மாலை 6:45 மணிக்கு புறப்பட வேண்டிய, "நெல்லை - சென்னை எழும்பூர்" வண்டி எண்: 06070) வாராந்திர சிறப்பு ரயிலில், ஏசி பெட்டிகள் பெருமளவில் காலியாக உள்ளது. நேர் பாதையில் செல்லாமல், ஒவ்வொரு ஊராக சுற்றி காட்டிக்கொண்டு, பயணிகளின் நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட இரட்டை அகல ரயில் பாதையில், இந்த சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என்று தென் மாவட்ட பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தும் வந்தே பாரத் போன்ற ரயில்கள் மட்டும் தான் இந்த இரட்டை அகலப் பாதையில் பாதையில் செல்லுமா? இந்த சிறப்பு ரயில்கள் எல்லாம் அவ்வழியாக சென்றால் ரயில் பாதை தேய்ந்து விடுமா?? இன்று மட்டும் இந்த சிறப்பு ரயிலின் மூலம் ரூ.2,67,370 வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.