» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆட்சியர் வாகனம் ஜப்தி: தென்காசியில் பரபரப்பு!
வியாழன் 5, டிசம்பர் 2024 5:31:32 PM (IST)
தென்காசியில் விபத்து நஷ்ட ஈடு வழங்காதால் மாவட்ட ஆட்சியர் வாகனம் ஜப்தி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தென்காசியில் கடந்த 2016 ஆம் ஆண்டு குமார் என்பவர் செங்கோட்டை யூனியன் வாகனம் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வழக்கில் உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்காத நிலையில் ஆட்சியரின் வாகனம் மற்றும் பொருட்களை ஜப்தி செய்ய வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.