» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் பிரதான சாலையில் அபாய குழி : வாகன ஓட்டிகள் அவதி

சனி 18, ஜனவரி 2025 10:22:39 AM (IST)



தூத்துக்குடியில் பிரதான சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள குழியை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பஸ்கள் வெளியே செல்லும் வழியில் மேம்பாலம் அருகில் நடுரோட்டில் ஒரு ராட்சச பள்ளம் உள்ளது. மேலும், அதன் மேல் ஒரு பெரிய சிமெண்ட் குழாயை நட்டு வைத்துள்ளனர்.

இதனால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து எட்டயபுரம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. பஸ்ஸை வலது பக்கமாக திரும்பி செல்லும் போது பாலத்தில் இருந்து வரும் வாகனங்களுடன் மோதி விபத்துகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து குழியை மூட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

VijayanJan 21, 2025 - 05:19:47 AM | Posted IP 162.1*****

Ithu enanga pramatham. Thiruchendur poi parunga. 45 Km road um apadithan.

SrrriJan 20, 2025 - 11:43:40 PM | Posted IP 162.1*****

செயல் படாத மாநகராட்சி

பள்ளத்தில் விழுந்த வன்Jan 18, 2025 - 06:12:59 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி புதியபேருந்துநிலையத்தில்இருந்துபுறப்படும்அனைத்துபேருந்துகலும்ஆம்னிபேருந்தும்அந்தபள்ளத்தைகடந்துதான்செல்கிறதுபள்ளிகுழந்தைகள்பெரியவர்கள்அனைவரும்பயத்துடன்கடந்துசெல்கிறனர்

சண்முகம்Jan 18, 2025 - 06:09:14 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடி முக்கிய சாலையில் பெரும்புள்ளி சாலை கட்டமைக்க டெண்டர் எடுத்த நிறுவனம் கட்டமைப்பு தரம் மற்றும் பணி கள ஆய்வை அங்கீகரித்த அரசு பொறியாளர்கள் நிர்வாகிகள் வசம் குற்றவியல் சட்ட நடவடிக்கைகள் மற்றும் பழுது நீக்கியபுதிய கட்டுமான மதிப்பீட்டு தொகை பெற வேண்டும்.

ஓட்டு போட்ட முட்டாள்Jan 18, 2025 - 12:53:41 PM | Posted IP 172.7*****

முதலை அமைச்சர் ஊருக்கு வந்தால் மட்டும் இரவும் பகலும் பாராமல் திடீர் சாலையை சரி பண்ணுவார்களாம். அதான் காமராஜர் காலேஜ் ரோட்டில் போன மாதம் முதலை அமைச்சர் வரும்போது தான் நல்ல இருக்கு. அவர் போன பிறகு மாநகராட்சி துட்டு அதிகாரிகள் எல்லாம் கோமால இருப்பானுங்க.

JeorgeJan 18, 2025 - 10:53:54 AM | Posted IP 162.1*****

விடியா அரச

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory