» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

நெல்லையில் இருந்து கொங்கராயக்குறிச்சிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை!!

செவ்வாய் 4, பிப்ரவரி 2025 7:56:25 PM (IST)



நெல்லையில் இருந்து கொங்கராயக்குறிச்சிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கவேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொங்கராயக்குறிச்சி கிளை சார்பில் மாபெரும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கொங்கராயக்குறிச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, தூத்துக்குடி மாவட்ட தலைவர் நவாஸ் தலைமை வகித்தார். கொங்கராயக்குறிச்சி கிளைத் தலைவர் முஜிபுர் ரஹ்மான், செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், பொருளாளர் நாகூர் மீரான், துணைத்தலைவர் ஷேக்மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் சுலைமான் பிர்தவ்சி ''மறுமையை மறந்த மனிதன்'' என்ற தலைப்பிலும், மாநில செயலாளர் இம்ரான் ''வஹீச் செய்தியே மார்க்கம்'' என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினர். அதனைத்தொடர்ந்து, மாவட்ட பொருளாளர் ரஷித் காமில், துணை செயலாளர்கள் அசாருதீன், இமாம் பரீது, மாவட்ட செயலாளர் இம்ரான் ஆகியோர் பொதுக்கூட்டத்தின் நோக்கம் குறித்தும், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும் கருத்துக்களை தெரிவித்தனர்.

கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியதாகும். வக்ப் வாரிய திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். நெல்லை சந்திப்பில் இருந்து கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், கருங்குளம் வழியாக கொங்கராயக்குறிச்சிக்கு கூடுதலாக டவுன் பஸ்கள் இயக்கவேண்டும், 

நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள கருங்குளம்&கொங்கராயக்குறிச்சி புதிய பைபாஸ் ரோட்டில் விபத்துக்களை தடுக்க ரவுண்டானா, உயர்கோபுர மின்விளக்கு அமைக்கவேண்டும். கொங்கராயக்குறிச்சியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில், மாவட்ட வர்த்தக அணி பொறுப்பாளர் சிக்கந்தர், கிளை துணைச் செயலாளர் பிலால், மாணவரணி அக்கில், மருத்துவ அணி சுல்பிஹார், தொண்டரணி தவ்பிக் மற்றும் மாவட்ட, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory