» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உவரி கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

புதன் 5, பிப்ரவரி 2025 11:11:17 AM (IST)



உவரியில் புனித அந்தோணியார் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாளையங்கோட்டை ஆயர் ஜுடு பால்ராஜ் ஏற்றி வைத்தார்.

திருநெல்வேலி மாவட்டம் உவரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டு திருவிழா  செவ்வாய்க்கிழமை மாலை 6மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாளையங்கோட்டை மேனாள் ஆயர் ஜுடு பால்ராஜ்   மந்திரித்து கொடியேற்றி வைத்தார். கொடியேற்றம் முடிந்ததும் தூத்துக்குடி மறை மாவட்ட பொருளாளர் பிரதீப் மறைவுரை நிகழ்த்தினார். 

கொடியேற்று விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி  தினமும் காலை, மாலையில் திருப்பலி, நற்கருணை ஆசீர், மறையுரை நடைபெறுகிறது.  பிப்ரவரி 16ம் தேதி 13ம் நாள் திருவிழா அன்று காலை 6.00 மணிக்கு ஆரம்பர திருவிழா கூட்டு திருப்பலி நடைபெறுகிறது. இதனை தூத்துக்குடி மறை மாவட்ட மேதகு ஆயர் ஸ்டீபன் நடத்துகிறார்.

இதில், மறை மாவட்ட முதன்மை குரு ரவி பாலன், முதன்மை செயலர் ஜெகதிஷ் முன்னிலை வைக்கின்றனர். காலை 9.00 மணிக்கு கோடி அற்புதர் புனித அந்தோனியார் சப்பர பவனி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை திருத்தல தந்தையர்கள், நிதி குழுவினர், பணி குழு உறுப்பினர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு இறை மக்கள் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory