» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையை சிரமைப்பதில் நெடுஞ்சாலைத் துறை மெத்தனம் : பக்தர்கள் வேதனை!

திங்கள் 20, ஜனவரி 2025 10:22:35 AM (IST)



மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள தூத்துக்குடி - திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்காமல் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மெத்தனம் காட்டி வருகிறது. இதனால் குண்டும். குழியுமான சாலையால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுவதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய ஆன்மீக சுற்றுலா தலங்களாக விளங்கும் திருச்செந்தூர், குலசேகரன்பட்டிணம், மணப்பாடு ஆகிய பகுதிகளுக்கு செல்லும் தூத்துக்குடி - திருச்செந்தூர் பிரதான தேசிய நெடுஞ்சாலை கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தினால் சேதமடைந்தது. இதனால் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் வரையிலான இந்த சாலையில் முத்தையாபுரம் முதல் ஆறுமுகநேரி வரை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியு மாக காட்சியளிக்கிறது.

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு தமிழகம் மட்டு மல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இந்த சாலை கடந்த ஒரு ஆண்டிற்கும் மேலாக சீர மைக்கப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். 

சுமார் 45 கி.மீதொலைவிலான இந்த சாலையில் 30 கி.மீ சாலை மோசமான நிலையில் உள்ளது. பாதயாத்திரையாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர் இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை சீரமைக்காமல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மெத்தனமாக இருப்பது பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதனை நெடுஞ்சாலைத் துறையினர் கண்டும் காணாமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

ராஜாராம்Jan 20, 2025 - 12:39:48 PM | Posted IP 172.7*****

விடியலின் சோகம்.

ஓட்டு போட்ட முட்டாள்Jan 20, 2025 - 10:35:53 AM | Posted IP 172.7*****

முதல்ல அடிக்கடி சொகுசு காரில் போகும் அரசியல்வாதிகள் தான் சரிப்பண்ணி கொடுக்கணும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory