» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகளுக்கு தடை!

திங்கள் 26, மே 2025 10:47:40 AM (IST)

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தென்காசி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையத்தால் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு முதல் தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனப்பகுதிக்குள் தொடர்ந்து கனமழை பெய்தது.

இதன் எதிரொலியாக குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை 6 மணி முதல் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. 

தொடர்ந்து இரவு முதல் இன்று காலை வரை வனப்பகுதிக்குள் மழை தொடர்வதால் அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து செம்மண் நிறத்தில் விழ தொடங்கியுள்ளது. ஐந்தருவியில் 5 கிளைகளும் தெரியாத அளவிற்கு தண்ணீர் விழுகிறது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டியும், பழைய குற்றால அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இந்த தடையானது தொடர்ந்து நீடிக்கிறது.

குற்றாலம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகள் முழுவதும் வானம் கருமேகக் கூட்டங்கள் நிறைந்து, சாரல் மழை பெய்து வருவதுடன் குளிர்ந்த காற்றும் வீசி வருவதால் தென்காசி மாவட்டத்தில் இதமான சூழ்நிலை நீடிக்கிறது.

வனப்பகுதிக்குள் மழைப்பொழிவு குறைந்து அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் சீராகும் பட்சத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. தடையால் வெளியூர்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் பலர் தூரத்தில் நின்று அருவிகளை பார்த்து குளிக்க முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory