» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சுய தொழில் தொடங்குவதற்கு ரூ.20 இலட்சம் வரை வங்கிக்கடன்: விண்ணப்பங்கள் வரவேற்பு
திங்கள் 26, மே 2025 12:02:41 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் நகர்ப்புற ஏழை/சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கு வங்கிக்கடன் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது தொடர்பாக – மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு : திருநெல்வேலி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சுய வேலைவாய்ப்பு திட்டத்தில் 2025-26-ம் ஆண்டில் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தனிநபர் வங்கி கடன் மற்றும் குழுக்களுக்கு வங்கி தொழிற்கடன் பெற்றுத்தரும் பொருட்டு பயனாளிகளை தேர்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு மாவட்ட அளவிலான தேர்வுக்குழு (Task Force Committee) அமைக்கப்பட்டுள்ளது.
சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தனிநபர் தொழில் கடன் (SEP-I) 18 வயதிற்கு மேல் உள்ள நகர்ப்புற ஏழைகளில் தகுதியான நபர்களுக்கு ரூ.4.00 இலட்சம் வரையிலும் கடன் வழங்கப்படும் மற்றும் குழு தொழில் கடன் (SEP-G) 18 வயதிற்கு மேல் உள்ள நகர்ப்புற ஏழைகளில் (2 நபர்கள் முதல் 5 நபர்கள் கொண்ட தொழில் குழு) தகுதியான குழுவிற்கு ரூ.20.00 இலட்சம் வரை கடன் வழங்கப்படும். மேற்படி தகுதியுள்ள நகர்ப்புற ஏழை/சுய உதவிக்குழு உறுப்பினர்கள்/குழுக்கள், தனிநபர் கடன்/குழுக்கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
எனவே திருநெல்வேலியில் நகர்ப்புற பகுதிகளில் வசிக்கும் ஏழை/சுய உதவிக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் சுய தொழில் திட்டத்தின் கீழ் தனிநபர் வங்கி கடன் மற்றும் குழுக்களுக்கு வங்கிக்கடன் பெற்று வழங்க உரிய படிவத்தில் விண்ணப்பத்தினை தயார் செய்து திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கொக்கிரகுளம், திருநெல்வேலி என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு நகர்ப்புற ஏழை/சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தி சுய தொழில் தொடங்குவதற்கு வங்கிக்கடன் பெற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்படி விண்ணப்பத்தினை https://tirunelveli.nic.in என்ற இணையதளத்தில் பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ககன்யான் திட்டத்திற்கான விகாஸ் என்ஜின் 7 வினாடி சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு
புதன் 28, மே 2025 12:09:44 PM (IST)

திருநெல்வேலியில் மே 29ல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்
செவ்வாய் 27, மே 2025 4:14:11 PM (IST)

வினாத்தாள் கசிவு? மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வு ஒத்திவைப்பு!
செவ்வாய் 27, மே 2025 11:36:45 AM (IST)

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: 3வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை!
செவ்வாய் 27, மே 2025 11:18:16 AM (IST)

தென்காசி புறவழிச்சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் : சரத்குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 27, மே 2025 10:37:36 AM (IST)

குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகளுக்கு தடை!
திங்கள் 26, மே 2025 10:47:40 AM (IST)
