» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வினாத்தாள் கசிவு? மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வு ஒத்திவைப்பு!

செவ்வாய் 27, மே 2025 11:36:45 AM (IST)

வினாத்தாள் கசிந்ததாக வந்த தகவலை அடுத்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் "இன்டஸ்ட்ரியல் லா" பாடத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் முக்கியமான பல்கலைக் கழகமாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. நெல்லை, தென்காசி, குமரி, தூத்துகுடி உள்பட பல மாவட்டங்களில் இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் 106 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்த கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது.

அதன்படி இன்று "இன்டஸ்ட்ரியல் லா" என்ற பாடத்திற்கான தேர்வு நடைபெற இருந்தது. மாணவ, மாணவிகள் தேர்வுக்கு தயாராகி வந்தனர். இந்த நிலையில் இன்று திடீரென "இன்டஸ்ட்ரியல் லா" பாடத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மனோன்மணியம் பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் 106 கல்லூரிகளிலும் இண்டஸ்ட்ரியல் லா பாடத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் கசிந்ததால் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இன்டஸ்ட்ரியல் லா பாடத் தேர்வுக்காக கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்களை திரும்ப பெறும் பணி நடந்து வருகிறது. மேலும் எப்படி இந்த வினாத்தாள் கசிந்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory