» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!
வெள்ளி 25, ஜூலை 2025 10:36:40 AM (IST)
கன்னியாகுமரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் ஒரு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக தோட்டவாரத்தை சேர்ந்த ரமேஷ்குமார்(58) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் கூறினர். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்களில் சிலர், இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு புகார் தெரிவித்தனர்.
அதன் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது உண்மையென தெரியவந்தது. அதேபோல் ஒரு மாணவியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் தலைமை ஆசிரியர் ரமேஷ்மார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிற்றார் அணையினை மீன்பாசி குத்தகைக்கு இணைய வழி ஏல அறிவிப்பு!
சனி 26, ஜூலை 2025 12:19:47 PM (IST)

அரசு பஸ் - பைக் நேருக்கு நேர் மோதி விபத்து: பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி; 2பேர் பாயம்!
சனி 26, ஜூலை 2025 11:49:21 AM (IST)

உடல் உறுப்புகள் திருட்டை முறைகேடு என்பதா? - அமைச்சருக்கு அண்ணாமலை கண்டனம்!!
சனி 26, ஜூலை 2025 11:06:22 AM (IST)

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வாலிபர் கைது!
சனி 26, ஜூலை 2025 11:01:17 AM (IST)

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத் திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்
சனி 26, ஜூலை 2025 10:29:39 AM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.305 கோடியாக உயர்வு: நிர்வாக இயக்குனர் தகவல்!
சனி 26, ஜூலை 2025 8:52:21 AM (IST)
