» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

வெள்ளி 25, ஜூலை 2025 4:51:44 PM (IST)

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு - வடமேற்கு திசையில், மேற்கு வங்கம் - வடக்கு ஒடிசா கடலோரப் பகுதிகளை நோக்கி இன்று நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து 9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. அதன்படி சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, காரைக்கால், புதுவை ஆகிய 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. மேலும், ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory