» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் மாநகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆட்சியர் ஆய்வு!!

வெள்ளி 25, ஜூலை 2025 12:03:34 PM (IST)



நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலன் கருதி, அவர்களின் பகுதிகளிலேயே நேரிடையாக சென்று முகாம்கள் நடத்தி கோரிக்கை மனுக்களை பெற, உங்களுடன் ஸ்டாலின் என்ற அற்புதமான திட்டம் அக்டோபர் மாதம் 15-ம் தேதி வரை நடத்திட அறிவுறுத்தியுள்ளார்கள்.

அதனடிப்படையில் இன்று அகஸ்தீஸ்வரம் வட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 13 -வது வார்டுக்கு வடசேரி சோழராஜ கோவில் MMI ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற முகாமினை நேரில் பார்வையிட்டு, முகாம் செயல்பாடுகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டு, தகுதியானவர்களுக்கு உடனடியாக ஆணை வழங்கிட அறிவுறுத்தப்பட்டது.

மேலும் இம்முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களின் கோரிக்கையினை கேட்டறியப்பட்டது. பதில் கிடைக்க பெறாத பொதுமக்கள் தங்களை நாடி வந்து கேட்கும் போது தகுந்த பதில்களை அவர்களுக்கு வழங்குவதோடு, அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory