» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருவனந்தபுரம் நவராத்திரி விழா: சுசீந்திரத்திலிருந்து முன்னுதித்த நங்கை விக்கிரகம் புறப்பாடு

வெள்ளி 19, செப்டம்பர் 2025 3:31:26 PM (IST)



திருவனந்தபுரம் நவராத்திரி விழாவை முன்னிட்டு சுசீந்திரத்திலிருந்து முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பாடு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் நடைபெற்றது. 

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கேரள மற்றும் தமிழ்நாடு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் சுசீந்திரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. திருவிதாங்கூர் தலைநகராக விளங்கிய பத்மனாபபுரத்தில் மன்னர் காலத்தில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாளடைவில் நிர்வாக வசதிக்காக தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்ட பின்னரும் இங்கிருந்து சுவாமி விக்ரகங்கள் திருவனந்தபுரம் எடுத்துச் செல்லப்பட்டு நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. 

வரும் 23ம் தேதி நவராத்திரி விழா தொடங்குவதையொட்டி நாளை காலை பத்மனாபபுரம் அரண்மனையில் இருந்து நவராத்திரி பவனி புறப்படுகிறது. இதற்காக சுசீந்திரத்திலிருந்து முன்னுதித்த நங்கை விக்கிரகம் பல்லக்கில் எடுத்துச் செல்லப்பட்டது. சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் வெளியே கொண்டுவரப்பட்ட தேவி விக்ரகத்திற்கு தமிழ்நாடு மற்றும் கேரளா போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். இன்று காலை இங்கிருந்து வேளிமலை முருகன் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை விக்ரகமும் புறப்பட்டு பத்மநாபபுரம் வந்தடையும். தொடர்ந்து இங்கிருந்து நவராத்திரி பவனி புறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory