» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நிமிர்ந்து நில் – தொழில்முனைவோர் புத்தாக்க செயல்பாடுகள் : ஆட்சியர் கலந்துரையாடல்

சனி 20, செப்டம்பர் 2025 10:48:44 AM (IST)



கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDI–TN) சார்பில் "நிமிர்ந்து நில்" தொழில்முனைவோர் புத்தாக்க செயல்பாடுகள் குறித்து உயர்கல்வி நிறுவனங்களின் உயர்மட்ட மேலாண்மை சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்துரையாடி தெரிவிக்கையில்- தமிழ்நாடு அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களின் புத்தாக்க சிந்தனையை படைப்புகளாக மாற்றி அவர்களை தொழில்முனைவோராக உருவாக்க தமிழ்நாடு இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு திட்டம் "நிமிர்ந்து நில்” செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

"நிமிர்ந்து நில்” - திட்டத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான உயர்மட்ட மேலாண்மை சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிமிர்ந்து நில் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் கல்லூரிகளின் பங்களிப்பு பற்றிய விழுப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தமிழ்நாடு இளைஞர் கண்டுபிடிப்பு தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் தொலைநோக்கு பார்வைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. 

இளைஞர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவிற்கான சிந்தனைகளை ஊக்குவிக்க, நிமிர்ந்து நில் என்ற தமிழ்நாடு இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தினை (TNYIEDP) செயல்படுத்தப்பட்டு வருகிறது. நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் பிரச்சினைகளைக் கண்டு பயப்படக்கூடாது மாறாக அந்தப் பிரச்சினையிலிருந்து ஒரு புதிய வணிகத்திற்கான யோசனையைக் கண்டுபிடிக்க வேண்டும். 

இந்த புதுமையான நவீன உலகில் தொழில்முனைவோர் எவ்வாறு சிந்திக்க வேண்டும் என்பது குறித்தும், மாணவர்கள் சமூக பிரச்சனைகளுக்கு புத்தாக்க சிந்தனை மூலம் தீர்வு காண வேண்டியதன் தேவை குறித்தும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் தொழில் முனைவோரின் பங்களிப்பு குறித்தும், இத்திட்டத்தில் உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பயிலும் மாணவர்களிடம் எடுத்து செல்ல வேண்டியதன் தேவை மற்றும் எவ்வாறு மாணவர்களிடம் எடுத்துரைத்து அவர்களை தொழில்முனைவோராக உருவாக்குவது என்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 83 உயர்கல்வி நிறுவனங்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் இணை இயக்குநர் A.பெர்பெட், கன்னியாகுமரி மாவட்ட மைய ஒருங்கிணைப்பாளர் M.S.ஸ்டார்வின், மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி உதவி இயக்குநர் லட்சுமிகாந்தன், தென்காசி மாவட்ட திட்டமேலாளர் பலவேசம், கன்னியாகுமரி மாவட்ட திட்ட மேலாளர் ராஜேஷ், துறை அலுவலர்கள், உட்பட பலர் உள்ளார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory