» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தவெக தலைவர் விஜய் வீட்டிற்குள் இளைஞர்: மனநல மருத்துவமனையில் அனுமதி!

வெள்ளி 19, செப்டம்பர் 2025 4:20:34 PM (IST)



சென்னையில் தவெக தலைவர் விஜய் வீட்டிற்குள் இளைஞர் போலீஸ் விசாரணைக்கு பின்னர், அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

சென்னை - நீலாங்கரை கேசினோ டிரைவ் பகுதியில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் வீடு அமைந்துள்ளது. அவரது வீட்டுக்கு எப்போதும் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர், தனியார் பாதுகாவலர்கள் மற்றும் ‘ஒய்’ செக்யூரிட்டி பிரிவினரும் ஈடுபவது வழக்கம். இந்த நிலையில் பலத்த பாதுகாப்பையும் மீறி இளைஞர் ஒருவர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இதையடுத்து அந்த நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். தற்போது அந்த இளைஞர் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்தது மதுராந்தகத்தை சேர்ந்த அருண் என்பது தெரியவந்தது. இவர் விஜய் வீட்டின் பின் பக்கம் உள்ள சிறிய கேட் வழியாக பாதுகாவலர்கள் இல்லாத நேரத்தில் நேற்று முன்தினமே உள்ளே நுழைந்தது தெரியவந்துள்ளது. விஜயை பார்க்க இரவு முழுவதும் மாடியின் மீது உணவின்றி பதுங்கியிருந்ததும் தெரியவந்துள்ளது.

விஜய்யை பார்த்ததும், அருண் ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டதும், அவரை தரைத்தளத்திற்கு அழைத்து வந்து பாதுகாவலர்களிடம் விஜய் ஒப்படைத்ததும் தெரியவந்துள்ளது. அந்த இளைஞர் சற்று வித்தியாசமாக நடந்து கொண்டதால், அவரை மருத்துவமனையில் அனுமதிக்குமாறு விஜய் அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory