» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 20, செப்டம்பர் 2025 8:25:26 AM (IST)
17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் நேற்று வழங்கியது.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, குற்றவாளி இசக்கிமுத்துக்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை ,ரூ.10,000 அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டு நேற்று தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தகுமாரி, அரசு வழக்கறிஞர் முத்துலட்சுமி, தலைமைக் காவலர் ரபிலா குமாரி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்கள் நமது பெருமையின் அடையாளம் : முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
சனி 20, செப்டம்பர் 2025 12:22:29 PM (IST)

காயல்பட்டினம் பகுதியில் கடல்நீர் உட்புகும் கால்வாய் அமைவிட வரைபடம் கண்டுபிடிப்பு!
சனி 20, செப்டம்பர் 2025 11:48:07 AM (IST)

நிமிர்ந்து நில் – தொழில்முனைவோர் புத்தாக்க செயல்பாடுகள் : ஆட்சியர் கலந்துரையாடல்
சனி 20, செப்டம்பர் 2025 10:48:44 AM (IST)

காளை மாடு எட்டி உதைத்ததில் வாலிபர் பலி: சுசீந்திரத்தில் சோகம்!
சனி 20, செப்டம்பர் 2025 10:21:33 AM (IST)

அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் பயிற்சி : நேரடி மாணவர் சேர்க்கை
வெள்ளி 19, செப்டம்பர் 2025 4:35:40 PM (IST)

தவெக தலைவர் விஜய் வீட்டிற்குள் இளைஞர்: மனநல மருத்துவமனையில் அனுமதி!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 4:20:34 PM (IST)
