» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு பள்ளி மாணவர்கள் நமது பெருமையின் அடையாளம் : முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

சனி 20, செப்டம்பர் 2025 12:22:29 PM (IST)

தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நமது பெருமையின் அடையாளமாக திகழ்கின்றனர் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை நேரு விளையாட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 243 புதிய பள்ளிக்கட்டடங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 59 பள்ளிக்கட்டங்களை அவர் திறந்து வைத்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வாக 2,715 ஆசிரியர்களுக்கான நுழைவுநிலை பயிற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

இதைத்தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது: மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஆசிரியர் பணிக்கு வந்துள்ளவர்களுக்கு வாழ்த்துகள். மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் எடுப்பார்கள். ஆனால் ஆசிரியர்களுக்கே பாடமெடுத்திருக்கிறார் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி. ஆசிரியர் என்பவர் பாடங்களை மட்டும் கற்றுக்கொடுப்பவர் அல்ல. ஆசிரியர் முன்னால் அமர்ந்திருப்பவர்கள் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள்.

மாணவர்களின் சிந்தனையை தூண்டி அறிவை மேம்படுத்தும் பொறுப்பு ஆசிரியர்களிடம் உள்ளது. மாணவர்களுக்கு சரியானதை ஆசிரியர்கள் தான் வழிகாட்ட வேண்டும். சமூகத்திற்கே ஒளி ஏற்றி வைக்க வேண்டியவர்கள் ஆசிரியர்கள். பாட புத்தகத்தை கடந்து சமூக ஒழுக்கத்தை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும். மாணவர்களிடம் ஆசிரியர்கள் நண்பர்களாக நடந்துகொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு உடல்நலமும், மனநலமும் முக்கியம். மாணவர்களின் குடும்ப சூழலை கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும். மாணவர்களின் 2-வது பெற்றோர் ஆசிரியர்கள். பெற்றோர்களை விட ஆசிரியர்கள் மத்தியில்தான் மாணவர்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். தமிழ்நாட்டின் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நமது பெருமையின் அடையாளமாக திகழ்கின்றனர் என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory