» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை : போலீசார் விசாரணை
சனி 20, செப்டம்பர் 2025 12:39:46 PM (IST)
குலசேகரன்பட்டினத்தில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை வண்ணாரப்பேட்டை சேர்ந்தவர் சுப்பையா மனைவி பார்வதி (23), இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் கார்த்திக் மகன் வேலுச்சாமி (28). இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தார்களாம். இந்நிலையில் இருவரும் இன்று காலை நெல்லையில் இருந்து குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு வந்தனர்.
கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பின்னர் இருவரும் ஏற்கனவே தயாராக வைத்திருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த குலசேகரப்பட்டினம் போலீசார் அவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர் இரண்டு பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து 2பேரின் உடல்களும் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கள்ளக்காதல் ஜோடியான இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து குலசேகரப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு பள்ளி மாணவர்கள் நமது பெருமையின் அடையாளம் : முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
சனி 20, செப்டம்பர் 2025 12:22:29 PM (IST)

காயல்பட்டினம் பகுதியில் கடல்நீர் உட்புகும் கால்வாய் அமைவிட வரைபடம் கண்டுபிடிப்பு!
சனி 20, செப்டம்பர் 2025 11:48:07 AM (IST)

நிமிர்ந்து நில் – தொழில்முனைவோர் புத்தாக்க செயல்பாடுகள் : ஆட்சியர் கலந்துரையாடல்
சனி 20, செப்டம்பர் 2025 10:48:44 AM (IST)

காளை மாடு எட்டி உதைத்ததில் வாலிபர் பலி: சுசீந்திரத்தில் சோகம்!
சனி 20, செப்டம்பர் 2025 10:21:33 AM (IST)

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 20, செப்டம்பர் 2025 8:25:26 AM (IST)

அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் பயிற்சி : நேரடி மாணவர் சேர்க்கை
வெள்ளி 19, செப்டம்பர் 2025 4:35:40 PM (IST)
