» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோ ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை இலக்கு ரூ.5கோடி : ஆட்சியர் அழகுமீனா தகவல்!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 3:52:40 PM (IST)

தீபாவளியை முன்னிட்டு கோ–ஆப்டெக்ஸ் சிறப்புத் தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் வணிகவளாகத்தில் இயங்கி வரும் கோ ஆப் டெக்ஸ் அங்காடியில் நடைபெறும் தீபாவளி தள்ளுபடி விற்பனையினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆகியோர் முன்னிலையில் இன்று (19.09.2025) குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையினை துவக்கி வைத்து தெரிவிக்கையில்:-
கோ-ஆப்டெக்ஸ் தமிழ்நாட்டிற்குட்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் இரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்து நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறது.
காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளைக்கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி முதல் ஜனவரி 31ம் தேதி வரை தமிழ்நாடு அரசு வழங்கும் 30% சிறப்புத்தள்ளுபடி விற்பனை திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இந்த தீபாவளி விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுபுடவைகள், திருப்புவுனம் பட்டு சேலைகள், பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு இரகங்கள், பருத்தி சட்டைகள் திரைச்சீலைகள், நைட்டீஸ், மாப்பிள்ளைசெட் மற்றும் ஏற்றுமதி இரகங்கள் ஏரளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மண்டலத்தில் 13 விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது ரூ.10.00 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. இந்த வருடம் ரூ.12 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நான்கு விற்பனை நிலையங்களுக்கு ரூ.5 கோடிக்கு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டம் என்ற சேமிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன்படி 11 மாத சந்தா தொகை வாடிக்கையாளர்கள் செலுத்தினால் 12வது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 30% அரசு தள்ளுபடியுடன் வழங்கி வருகிறது. எனவே, பொதுமக்கள், அரசு அலுவலர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரம் சிறக்க கைத்தறி துணிகளை வாங்கி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சிதலைவர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
இவ்விழாவில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர் நா.இராஜேஷ்குமார், கைத்தறி மற்றும் துணிநூல் துறை உதவி இயக்குநர் ஜெயசுதா, ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உறைவிட உதவி மருத்துவர் மரு.விஜயலெட்சுமி, மண்டல தலைவர்கள் அகஸ்டீனா கோகிலா வாணி, வழக்கறிஞர் சதாசிவம், கோ-ஆப்டெக்ஸ் அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நிமிர்ந்து நில் – தொழில்முனைவோர் புத்தாக்க செயல்பாடுகள் : ஆட்சியர் கலந்துரையாடல்
சனி 20, செப்டம்பர் 2025 10:48:44 AM (IST)

காளை மாடு எட்டி உதைத்ததில் வாலிபர் பலி: சுசீந்திரத்தில் சோகம்!
சனி 20, செப்டம்பர் 2025 10:21:33 AM (IST)

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
சனி 20, செப்டம்பர் 2025 8:25:26 AM (IST)

அரசு மருத்துவக் கல்லூரியில் சான்றிதழ் பயிற்சி : நேரடி மாணவர் சேர்க்கை
வெள்ளி 19, செப்டம்பர் 2025 4:35:40 PM (IST)

தவெக தலைவர் விஜய் வீட்டிற்குள் இளைஞர்: மனநல மருத்துவமனையில் அனுமதி!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 4:20:34 PM (IST)

நாகர்கோவிலில் ரூ.50 இலட்சத்தில் ஆர்.பொன்னப்ப நாடார் திருவுருவச்சிலை அடிக்கல் நாட்டு விழா!
வெள்ளி 19, செப்டம்பர் 2025 3:39:27 PM (IST)
