» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கூந்தன்குளம் சரணாலயம் மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்!

வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 11:11:24 AM (IST)



கூந்தன்குளம் சரணாலயத்தை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தை மேம்படுத்திட ஒருங்கிணைந்த மேலாண்மை திட்ட அறிக்கை தயார் செய்து தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில், மாவட்ட வன அலுவலர் இரா.முருகன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்தியாவில் இதுவரை 85 நீர் நிலைகளுக்கு ராம் சார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது என்றும் அதில் 18 இடங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. ராம் சார் குறியீடு பெற்றுள்ள இடங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயமும் ஒன்றாகும். கூந்தன்குளம் சரணாலயம் சர்வதேச அளவிலான முக்கியத்துவம் பெற்றதாகும். 

இது இயற்கை நமக்கு அளித்துள்ள ஒரு கொடை இந்த சரணாலயத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றும் சரணாலயத்தை மேம்படுத்துவதில் இப்பகுதி மக்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது என்றும் நீர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கூந்தன்குளம் சரணாலயத்தில் மேம்படுத்துவதில் இங்குள்ள விவசாயிகள், நீர்வளத்துறை மற்றும் வனத்துறை ஆகியோர்களுடன் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மா.சுகன்யா, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் தங்கராஜ், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அனிதா,  உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மோகன்ராஜ், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர்                ரிச்சர்டு ராஜ், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை  கூட்டத்தில் கோயம்புத்தூர் சலீம் அலி பறவைகள் ஆய்வு மற்றும் இயற்கை வரலாறு மையத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர்  கோல்டின் குவாட்ரஸ் மற்றும் ஆய்வாளர்கள் இந்த மேலாண்மை திட்டம் தயாரிப்பது தொடர்பான கருத்துக்களை எடுத்துக் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory